உத்தரபிரதேச மாநிலம் இட்டாவாஹ் மாவட்டம் ராம்நகர் பகுதியில் வசித்து வருபவர் விமல் குமார் (25). அதேபகுதியை சேர்ந்த மான்சி (22) என்ற பெண்ணும், விமல் குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, விமல் குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்தனர். மான்சியை காதலித்து வந்ததால் இந்த திருமணத்தில் விமல் குமாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், விமல் குமாரும் அவரது காதலி மான்சியும் நேற்று அதிகாலை யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர்.
காதல் ஜோடி இருவரும் ராம்நகர் பகுதியில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன் உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வேகமாக வந்த ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் காதல் ஜோடிகளான விமல் குமார், மான்சி இருவரும் விழுந்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்த காதல் ஜோடி இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விமர் குமார் மற்றும் மான்சி வீட்டில் இல்லாததை அறிந்த அவர்களது குடும்பத்தினர் இருவரையும் தேடியுள்ளனர்.
அப்போது, ராம்நகர் பகுதியில் தண்டவாளம் அருகே காதல் ஜோடிகள் ரெயிலில் குத்து தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வாலிபர் தனது காதலியுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.