பென்னாகரம் வனச்சரகத்தில் இருப்பவர் புகழேந்திரன்(52) இவர் தலைமையிலான வனத்துறை குழுவினர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஏரியூர் பெண்ணாகரம் சாலையை ஒட்டி உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் மசக்கல் அருகே வனத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடல் முழுவதும் பல பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்த இந்த சடலம் தொடர்பாக ஏரியூர் காவல் நிலையத்திற்கு புகழேந்திரன் தகவல் கொடுத்தார் அதன் பெயரில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நபர் யார் எனவும், கொலையாளிகள் தொடர்பாகவும் ஏரியூர் காவல்துறையினர் விசாரித்து வந்தார்கள் அதாவது ஏரியூர் காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் யுவராஜ் தலைமையிலான காவல்துறையினர் இந்த விசாரணையை மேற்கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் சசிகுமார்(48) என்பது தெரியவந்தது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வேலைக்காக ஓசூரில் தங்கி இருந்தார் அதோடு மாந்திரீக விவகாரங்களிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சசிகுமார் மாயமானதாக அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஓசூர் ஹட்கோ காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார்கள் என்ற தகவலையும் விசாரணையின் மூலமாக காவல்துறையினர் அறிந்து கொண்டனர். விவகாரம் குறித்து சசிகுமார் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விபரங்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதனை அறிந்து கொண்டு கொலையாளிகளான ஓசூரை சேர்ந்த குணாளன், தினேஷ் உள்ளிட்ட இருவர் நேற்று மாலை பென்னாகரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த இருவரையும் காவல்துறையினர் அவர்களுடைய கஸ்டடியில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.