fbpx

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பக்கத்து வீட்டு வாலிபர்… போக்சோவில் கைது..!

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புரா அருகில் உள்ள குட்டேதோட்டா பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபாகர் (22) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபோன்று அடிக்கடி பிரபாகர், மாணவி தனியாக இருக்கும்போது மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அப்படி சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை சொன்னதால், அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், ஜெயப்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். அதன் பின்னர் பிரபாகரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rupa

Next Post

தெருநாய்களை பிடித்தால் ரூ.500 பரிசு… நாய்களை பிடிக்க முடியாமல் திணறும் கேரளா அறிவிப்பு…

Sat Sep 17 , 2022
கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் உயிர் பயத்தில் மக்கள் நடமாடவேண்டியுள்ளது. இந்நிலையில் தெருநாய்களை பிடிக்கத் திணறும் கேரள அரசு தெருநாய்களை பிடித்து தருவோருக்கு 500 ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் அத்துமீறிச் சென்றுகொண்டிருக்கின்றது. தெருநாய் கடித்து உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் உயிரிழப்பு ஏற்படுவதால் மக்கள் நடமான அஞ்சுகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் குழந்தைகளை […]

You May Like