நாடு முழுவதிலும் நியாய விலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாகவும் மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரையில் வழங்கப்பட்டு வருகின்றது.
அதே சமயம் அரசாங்கத்தின் எல்லா விதமான திட்டங்களும் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதற்கு இந்த நியாய விலை கடைகள் ஒரு மாபெரும் உதவியாக இருக்கிறது. ஆகவே நியாய விலை கடைகள் தொடர்பான புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
அதே நேரம் கூட்டுறவுத்துறை குறித்த காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் பொதுமக்களால் அதிகமாக கவனிக்கப்படுகிறது. இத்தகைய நிலைகள் தமிழகத்தில் இருக்கின்ற நியாய விலை கடைகளில் போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளின் மூலமாக பணம் செலுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
தற்சமயம் பொதுமக்கள் இணையதள பரிவர்த்தனைகளை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருவதால் இந்த அறிவிப்பு பொதுமக்களை குஷிப்படுத்தி இருக்கிறது.