fbpx

நண்பரின் மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்.. கஞ்சா வியாபாரிகள் அட்டூழியம்..!

கேரள மாநிலம் திருச்சூர், புன்னயூர்குளம் பகுதியில் உள்ள பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக வகுப்பில் சோகமாக அமர்ந்து இருந்தார். இதுபற்றி வகுப்பாசிரியை கேட்ட போது அவர் உடல்நலக்குறைவாக உள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து ஆசிரியை அந்த மாணவியை மருத்துவரிடம் அழைத்து சென்றார். மாணவியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதை கேட்ட ஆசிரியை அதிர்ச்சியடைந்தார். உடனே குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மாணவியிடம் விசாரணை செய்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியின் தந்தை அந்த பகுதியில் கஞ்சா விற்று வந்துள்ளார். இதற்காக அவரை காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர் ஜெயிலில் இருக்கும் தந்தையை ஜாமீனில் எடுக்க மாணவியின் தாயார் முயற்சி செய்தார். இதற்காக அவர் மலப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் அடிக்கடி மலப்புரம் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது இருந்தது.

அப்போது கணவரின் நண்பர்கள் மூன்று பேரிடம், வீட்டில் தனியாக இருக்கும் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார். மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மூன்று பேரும், அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை வெளியே சொன்னால், கொன்று விடுவதாக மிரட்டி அடிக்கடி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில்தான் மாணவிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. இதை தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் இதுகுறித்து போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மாணவியின் தந்தையின் நண்பர் ஷாஜி (26) என்பவரை கைது செய்தனர். மற்ற இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தந்தையின் நண்பர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

எழுத்தாளருக்கு ஜாமின் வழங்கிய வழக்கு; பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பெண் ஆடை அணிந்ததால் ஜாமீன்..!

Wed Aug 17 , 2022
கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவிக் சந்திரன். 74 வயதான சிவிக் சந்திரன் ஒரு மாற்றுத்திறனாளி. இதனிடையே, சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில் வைத்து கடந்த 2020- வருடம் பிப்ரவரியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளம்பெண் எழுத்தாளர் காவல் துறையில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கேட்டு சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

You May Like