fbpx

வங்கக் கடலில் விடுக்கப்பட்டிருக்கின்ற புயல் எச்சரிக்கை….! வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை வானிலை ஆய்வு மையம்…..!

வங்க கடல் பகுதியில் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்ற நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களை சற்று மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுகிறது அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு புயலின் தன்மை மற்றும் நகர்வு திசை போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

நடிகர் மனோபாலா மரணம்…..! திரையுலகினர் சோகம்….!

Wed May 3 , 2023
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்தன்மையை கொண்டவர் நடிகர் மனோபாலா. இவர் தமிழில் சற்று ஏறக்குறைய 700 திரைப்படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் காமெடி வேடங்களில் தான் நடித்து வந்தார். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பிரபலங்களையும் பேட்டி எடுத்து வந்தார். இத்தகைய நிலையில், சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. ஆகவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டது. […]

You May Like