fbpx

திரும்பத் திரும்ப பிரித்து வைத்ததால் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் பெற்றோர்…!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்த சின்ன மாடன் குடியிருப்பில் தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (16) என்ற மகன் உள்ளார். விஜயும் அதே பகுதியை சேர்ந்த விஜையின் உறவினரான மூக்காண்டியின் மகள் மேகலாவும் (15) காதலித்து வந்தனர். இது அவர்கள் வீட்டில் தெரிந்து இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், இது குறித்து மேகலாவின் தந்தை நாசரேத் காவல் நிலையத்தில், தன் மகளை கடத்திச் சென்றதாக விஜயின் மீது புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நாசரேத் காவல்துறையினர் விஜயை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த விஜய் மீண்டும் மேகலாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தியுள்ளார். மறுபடியும் பெற்றோர் கண்டித்து இருவரையும் வீட்டில் அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கடந்த புதன்கிழமை இரவு இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். காணாமல் போன இருவரையும் அவர்களது பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை சின்ன மாடன் குடியிருப்பு செல்லும் வழியில் உள்ள ஒரு குளக்கரையில் இருவரும் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்த நாசரேத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விஜயின் தந்தை அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Rupa

Next Post

மக்களே அலர்ட்.. இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்யும்... வானிலை மையம் எச்சரிக்கை..

Fri Jul 15 , 2022
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ […]
தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

You May Like