திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கனவாய்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி தமயந்தி (42) இவர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 2️ குழந்தைகள் இருக்கின்றன.
இந்த நிலையில், கோபிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய அண்ணன் ராஜாங்கம்(55)என்பவருக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்வது குறித்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது சொத்து பிரச்சனை குறித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், வழக்கறிஞரை சந்திப்பதற்காக கோபியின் மனைவி தமயந்தி திண்டுக்கல்லுக்கு சென்ற வியாழக்கிழமை அதாவது, நேற்று புறப்பட்டுள்ளார் உலுப்பக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் தமயந்தி ஏறுவதை பார்த்த ராஜாங்கம் அதே பேருந்தில் தானும் தன்னுடைய 14 வயது மகனுடன் ஏறியுள்ளார். அந்த பேருந்து கோபால்பட்டி அடுத்து இருக்கக்கூடிய வடுகப்பட்டி அருகே வந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியை ராஜாங்கம் வெட்டியுள்ளார்.
இதன் காரணமாக, அந்த பேருந்தில் இருந்து தான் மற்ற பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிடத் தொடங்கினர். பேருந்தின் ஓட்டுனர் விஜய் பேருந்து நிறுத்தினார் இதற்கு நடுவே ராஜாங்கம் தன்னுடைய மகனை விட்டுவிட்டு பேருந்துல இருந்து இறங்கி தப்பி சென்றார். பலத்த காயமடைந்த தமயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த சாணார்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமயந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தமயந்தியின் 2 மகன்களில் ஒருவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருக்கிறார். 2வது மகன் நேற்று தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.