காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த ஒரு காதல் ஜோடி இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் குண்டு குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இதனை அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த ஒரு கும்பல் பார்த்து அதன் பிறகு அந்த காதல் ஜோடியை வழிமறித்து, மிரட்டி அந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அதாவது இந்த காதல் ஜோடி அந்த பகுதிக்கு சென்றபோது மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு பேர் இந்த காதல் ஜோடி வருவதை பார்த்தவுடன், அந்த 2️ பேர் கொண்ட மர்ம கும்பல் மேலும் 3 பேரை தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் கத்தி முனையில் போதையிலிருந்த 5 பேரும் சேர்ந்து அந்த மாணவனை தாக்கி விட்டு, அந்த இளம் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதனையடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர் இவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றபோது விமல் என்ற பெயரை அந்த மர்ம கும்பலில் ஒருவன் அழைத்துள்ளான். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அந்த பெயரை வைத்து தொடர்பு கொள்ள நபரையும், அவருடன் வந்தவர்கள் யார் என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
காவல்துறையினர் விசாரித்ததில், இந்த வழக்கில் மேல் கதிர்ப்பூர் அருகே உள்ள விப்பேடு, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தென்னரசு (19) விப்பேடு வளர்புறம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22) விப்பேடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த விமல் என்ற விமல் குமார் (25) காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மணி (23) விப்பேடு வளர்புறம் தகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற ஊக்கு (20) உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்தனர் இவர்கள் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது காவல்துறையினரின் விசாரணையின் மூலமாக தெரியவந்தது.