fbpx

நடு ரோட்டில் பட்டாகத்தியுடன் அலம்பல் செய்த இளைஞர்.. தட்டி கேட்ட பெண்ணை தாக்கியதால் பரபரப்பு..!

ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூர் மதுரைவீரன் கோவில் வீதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரது மகன் தீனதயாளன்(22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று அங்கிருக்கும் பல்நோக்கு மையம் அருகில் பொது இடத்தில் கையில் பட்டா கத்தியுடன் நின்று கொண்டு அந்த வழியாக போவோர், வருவோரை தகாத வார்தைகளால் திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதை கண்ட அதே பகுதிைய சேர்ந்த மகேஸ்வரி(33) என்பவர், அவரை பொது இடத்தில் நின்று தகராறு செய்வது தவறு என்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தீனதயாளன், மகேஸ்வரியை திடீரென கையால் தாக்கினார். இதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை பிடிக்க அங்கு ஓடி வந்தனர்.

உடனே அவர்களிடம் பட்டா கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு தீனதயாளன் தப்பி சென்றார். அப்போது பட்டா கத்தியை அங்கேயே தவறவிட்டு சென்றார். இதுகுறித்து ஆனைமலை‌ காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீனதயாளனை கைது செய்தனர்.

Rupa

Next Post

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்கள்..!!

Tue Aug 30 , 2022
சென்னை மாநகராட்சியின் 132 பள்ளிகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 792 கழிவறைகள் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை கட்டுவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள கழிவறைகளை […]

You May Like