fbpx

சமூக வலைதள பழக்கத்தால் பாதை மாறிய இளம் பெண்! தூக்கில் தொங்கிய கணவன்!

தற்சமயம் திருமணத்தை கடந்த தவறான உறவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. திருமணத்தை தாண்டிய தவறான உறவு என்பது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஆனால் இப்படியான உறவு வெளியில் தெரியாத வரையில் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது போன்ற உறவு வெளியில் தெரிந்து விட்டால் பல அசம்பாவிதங்களை நிகழ்த்தி காட்டி விடுகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரபு(36). இவருக்கு திருமணம் நடந்து தீபா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், இருக்கிறார்கள். ஜெயபிரபு சொந்தமாக டிப்பர் லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தீபா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தான் சென்ற நவம்பர் மாதம் 21 ஆம் தேதி தீபாவின் கணவர் ஜெயபிரபு மாரடைப்பின் காரணமாக, உயிரிழந்து விட்டதாக ஜெயபிரபுவின் தந்தை ஆசீர்வாதம் உள்ளிட்ட உறவினர்களுக்கு தீபாவிடமிருந்து தகவல் வந்துள்ளது. ஜெயபிரபுவின் சொந்த ஊரான கொடுங்காவயலுக்கு தீபாவின் உறவினரான தேவகோட்டையில் காவல் துறையில் பணியாற்றும் ஒரு நபரின் காரில் இறந்து போன ஜெயபிரபு உடல் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் மகனின் மரணத்தில் ஜெயபிரபுவின் சந்தை ஆசீர்வாதத்திற்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனெனில் ஜெயபிரபு தனக்கும், மனைவிக்கும் அவ்வப்போது தகராறு வருவதாகவும், திருமண வாழ்க்கை நிம்மதியாக இல்லை என்று தன்னுடைய தந்தையிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான் ஜெயபிரபு மாரடைப்பு காரணமாக, உயிரிழந்துள்ளார் என்று தகவல் கிடைத்தது. ஆகவே இது ஆசீர்வாதத்திற்கு சந்தேகத்தை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் தன்னுடைய மகனின் கைப்பேசியில் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா? என்று எண்ணி மருமகள் தீபாவிடம் ஜெயபிரபுவின் கைபேசியை கேட்டுள்ளார். அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. நாளை தருகிறேன் என்று தெரிவித்த தீபா, மறுநாள் பிரபுவின் செல்போனை ஆசீர்வாதத்திடம் வழங்கியுள்ளார்.

ஆனால் அந்த கைபேசியை பயன்படுத்தத் தெரியாத ஆசீர்வாதம், தன்னுடைய சக நண்பரிடம் வழங்கி இதில் கடைசியாக மகன் யாரிடம் பேசி இருக்கிறார் மற்றும் வேறு ஏதாவது விவரம் இந்த கைபேசியில் உள்ளதா, என்று சோதனை செய்திருக்கிறார். அப்போது அந்த கைப்பேசியில் எந்தவிதமான தகவலும் இல்லாமல் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் ஆசிர்வாதம்.

ஜெயபிரபுவின் தந்தை அதற்குப் பிறகு தன்னுடைய நண்பரின் உதவியுடன் அழிந்து போன அனைத்து தரவுகளையும் அந்த கைபேசியில் மீட்டெடுத்து பார்த்தபோது, மருமகள் தீபா பல ஆண்களுடன் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்டவை மூலமாக திருமணத்தை தாண்டிய தவறான உறவில் இருந்தது தெரியவந்திருக்கிறது. அந்த தரவுகள் அனைத்தும் மகனின் கைபேசியில் இருந்தது அவருக்கு மேலும் அதிர்ச்சியை வழங்கியிருக்கிறது.

அதன் பிறகு காரைக்குடி ஏ.எஸ்.பி ஸ்டாலினிடம் தன்னுடைய மகனின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், மருமகளின் தவறான நடத்தை தொடர்பாகவும் ஆதாரங்களுடன் புகார் வழங்கினார் ஆசிர்வாதம். இதன் பெயரில் காரைக்குடி ஏ எஸ் பி உத்தரவின் அடிப்படையில் ஜெயபிரபு உயிரிழப்பு தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, தீபா மற்றும் அவருடைய ஆண் நண்பர்களை அழைத்து தீவிர விசாரணை நடத்தினர் காவல் துறையினர்.

காவல்துறையினரின் விசாரணையில் தீபா ஜெயபிரபு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையினருக்கு பயந்து உறவினர்களிடம் மாரடைப்பு உண்டாகி உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாகவும் சொல்லி இருக்கிறார் என்பது தெரியவந்தது.

ஆனாலும் இந்த மரணம் தொடர்பான முழுமையான விவரங்களை அறிவதற்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை நிபுணர் தேவகோட்டை வட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட ஜெயபிரபு உடல் 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்து மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் ஜெயபிரபு உயிரிழந்தது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும். அதன் பிறகு வழக்கு பதிவு செய்ததில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு...! 2023 ஜனவரி முதல் ரேஷன் கடைகளில்...! அரசு அட்டகாசமான அறிவிப்பு...!

Thu Dec 8 , 2022
2023 ஜனவரி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படவுள்ளது. செறிவூட்டல் அரிசி, ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநிலங்களின் உணவுத் துறை செயலாளர்களுடன் சமிபத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் ஆலோசனை நடத்தினார். அதேபோல 2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட […]
’ரேஷன் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம்’..!! - ராதாகிருஷ்ணன்

You May Like