fbpx

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியீட்டின் எதிரொளி…..! கல்லூரிகளில் சேர முதல் நாளிலேயே குவிந்த விண்ணப்பங்கள்….!

தமிழகத்தில் மொத்தமாக இருக்கின்ற 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கின்ற இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான 2023-2024 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் விற்பனை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் நேற்று காலை முதல் ஆரம்பமானது.

மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப்படிப்பு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், மற்ற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு முதல் நாளிலேயே நேற்று 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருக்கின்ற 1,07,395 இளநிலை பட்டப்படிப்புகளில், மாணவர்கள் சேர்வதற்கு முதல் நாளிலேயே 18,322 பேர் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் அதோடு வரும் 19ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

விரைவில் மாற்றப்படுகிறதா தமிழக அமைச்சரவை….? வெளியான அதிரடி தகவல்….!

Tue May 9 , 2023
திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து 2 வருடங்கள் நிறைவு செய்து 3வது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற போது போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜகண்ணப்பன் சிக்கியதால் அவரிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டு, சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சரவையில் எந்த விதமான மாற்றமும் இன்றி ஆட்சி நடைபெற்று வருகிறது இத்தகைய நிலையில், தமிழக […]

You May Like