ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்தார். ஆகவே அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெற வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கி வருகிறது. அதோடு, திமுகவை சார்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து குழுக்களின் உறுப்பினர்கள் எல்லோரும் அந்த தொகுதியில் முற்றுகையிட்டு இருக்கிறார்கள்
அந்த கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் இ வி கே எஸ் இளங்கோவன் இந்த தேர்தலில் களம் இறங்குகிறார். அதேபோல அதிமுக கொங்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என்பதை நிரூபிக்கும் விதத்தில், 100% இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு களம் இறங்குகிறது அதிமுகவின் சார்பாக திரு கே எஸ் தென்னரசு வேட்பாளராக களம் இறங்குகிறார்.
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இருதரப்பினரும் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுகவின் வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை ஆதரித்து நேற்று ஈரோடு கனிராவுத்தர் குளம் பிராமண பெரிய அக்ரஹாரம் மண்டிப்பேட்டை பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, மின் கட்டண உயர்வு, குடிநீர் சொத்து வரி, உயர்வு மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக, வீடு கனவில் தான் கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்டதால் நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவை அதிகரிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதிமுக ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக அதிமுக இருந்திருக்கிறது. 33 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை அதிமுகவிற்கு மதமும் சாதியோ இல்லவே இல்லை 100% மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வக்பு வாரிய மானியம், உலமாக்கள் ஓய்வூதியம் உயர்வு, பள்ளி வாசல் புதுப்பிக்க நிதி, ஹஜ் பயண மானியம் உயர்வு, உமறு புலவர் பெயரில் அரசு விருது,காயிதே மில்லாத்துக்கு அரசு விழா எடுக்கப்பட்டவுடன் மணிமண்டபம் என்று அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் அரசியல் சார்ந்து அவ்வப்போது கூட்டணி கட்டமைக்கப்படும், அரசியல் சூழ்நிலைக்காக, வெற்றி பெறுவதற்காக கூட்டணி அமைப்பார்கள். ஆனால் கொள்கை வேறு கூட்டணி வேறு எங்களுடைய கொள்கையை யாராலும் அழிக்க முடியாது. எப்போதும் மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அதிமுக தான் என்று தெரிவித்தார்.