நண்பர்களால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சோகம்…!

அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டம் பாவல் என்ற பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் 19 வயதான இளம்பெண் பயின்று வருகிறார். இதனிடையே, அந்த ராணுவ தேர்வுக்கான பயிற்சி மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில்,அந்த இளைஞர்களுக்கும் 19 வயது இளம்‌ பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை கவ்ஷாலா என்ற காட்டுப் பகுதிக்கு அந்த மூன்று பேரும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணை மூன்று இளைஞர்களும் சேர்ந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது பற்றி யாரிடமாவது சொன்னால் அந்த பெண்ணின் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவோம் என அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், பயத்தில் அந்தப் பெண் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால், தனக்கு நடந்த பாலியல்வன்புனர் குறித்து, அப்பெண் கடந்த திங்கட்கிழமை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்தப் பெண்ணை ஹாஸ்பிடல் அனுமதித்து பரிசோதனை செய்ததில், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனை அரிவாளால், போட்டுத் தள்ளிய மனைவி...!

Wed Jul 6 , 2022
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட கொற்கை கிராமத்தில் வசித்து வருபவர் மகாதேவன் (53). இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகாதேவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மகாதேவன் அவரது மனைவி அமுதாவிடம் காசு வாங்கிக் கொண்டு போய் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது மூத்த […]

You May Like