fbpx

திருமணம் நிட்சயம் செய்த நிலையில்.. குளியலறையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை..!

பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் திவ்யா (22). பி.காம் படித்து முடித்துவிட்டு எம்.சி.ஏ. படிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால் திவ்யாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர். எனவே ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ஒருவருக்கு, திவ்யாவை திருமணத்திற்கு நிச்சயம் செய்தனர்.

வருகிற 28-ஆம் தேதி திவ்யாவின் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திவ்யா, அவரது பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும். எனவே இப்பொழுது தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். இதனால் திவ்யாவின் பெற்றோர், அவரை ஆவடியை அருகே உள்ள பங்காருபேட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் அவருடைய தாய் மாமா ரமணா (40) வீட்டில் தங்க வைத்தனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திவ்யா, தனது தாய் மாமா வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை திவ்யாவின் தாய், அவருக்கு போன் செய்தார். அப்போது திவ்யா, தனது தாயுடன் போனில் வாக்குவாதம் செய்துள்ளார். அதன் பிறகு போனை வைத்துவிட்டு குளிக்க போவதாக தனது அத்தையிடம் கூறிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் பாத்ரூமில் இருந்து திவ்யா வெளியே வரவில்லை.

எனவே சந்தேகமடைந்த அவரின் அத்தை, பாத்ரூம் சென்று பார்த்தபோது, அங்கு‌ திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, திவ்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Baskar

Next Post

’நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது’..! - நீதிபதிகள் கருத்து..!

Thu Aug 11 , 2022
நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கல்குவாரிக்கு அனுமதி வழங்குவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலை அமைப்பது போன்றபல்வேறு பொதுநல வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனை நடக்கக்கூடிய இடம். இங்கு சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது போன்றவை நீதிமன்றத்தின் பணிகள் இல்லை. மேலும், […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like