அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதிமுகவின் பொது செயலாளர் பதவி மறுபடியும் கொண்டுவரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான் அதிமுக மேற்கொண்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கு வரும் பத்தாம் தேதி நீதிபதி பிரதீப் எம் சிங் முன்பு விசாரணைக்கு வர உள்ளது