சேலம் மாவட்டம் கோரிமேடு சின்ன கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரும், அவருடைய மாமா உள்ளிட்ட இருவரும் இன்று மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர் காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனுவை வழங்கிவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அந்த சிறுமி, நான் அனாதை இல்லத்தில் வளர்ந்து கொண்டு இருந்தபோது சிறு வயதிலேயே அதிமுகவின் பிரமுகர் சண்முகம் தத்தெடுத்து விட்டார். என்று கூறியிருக்கிறார்.
அவர் என்னை தத்தெடுத்த அந்த நாள் முதல் சரியான உணவு வழங்காமல் எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு வருட காலமாக வளர்ப்பு தந்தையான சண்முகம் மற்றும் அவருடைய வீட்டில் குடியிருக்கும் மணி உள்ளிட்டோர் நாள்தோறும் மதுவை குடித்துவிட்டு வந்து என்னிடம் தகாத வார்த்தையில் பேசியும், பாலியல் தொந்தரவு வழங்கியும் உள்ளார்கள். இது தொடர்பாக என்னுடைய வளர்ப்புத் தாய் நியாயம் கேட்டாலும் தாயையும் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், வளர்ப்பு தந்தை சொல்லிட்டு ஒரு மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து கன்னங்குறிச்சி காதல் நிலையத்தில் புகார் வழங்கினால் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை பெறாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். தற்சமயம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் சமயத்தில் எனக்கு சரிவர உணவு வழங்காமல் மது குடித்துவிட்டு வந்து பாலியல் தொந்தரவு செய்வதால் என்னால் சரிவர படிக்க இயலவில்லை. ஆகவே நான் தவித்து வருகிறேன். எனவே சரியான நடவடிக்கை மேற்கொண்டு எனக்கு வசிப்பதற்கும், படிப்பதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக காவல்துறையினர் சரியான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்திருப்பதாக கூறியிருக்கிறார். பாலியல் தொந்தரவு வழங்கும் வளர்ப்பு தந்தை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து பாதிக்கப்பட்ட சிறுமி மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் வழங்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.