இந்தியாவில் வசித்து வரும் ரீனா சிபார் வயது (92). இவரது பூர்வீக வீடானது ஒன்று பாகிஸ்தான் நாட்டில் இருக்கிறது. 75 வருடங்களுக்கு பின் பாகிஸ்தானின் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு ரீனா சென்றுள்ளார். அந்த மூதாட்டிக்கு நல்லெண்ண நடவடிக்கையின் ஒரு அங்கமாகப் பாகிஸ்தானின் தூதரகம் மூன்று மாதக் கால விசா வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து பாகிஸ்தானின் ராவல்பிந்தி நகரில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பூர்வீக வீட்டிற்கு வாகா-அட்டாரி எல்லை வழியே ரீனா நேற்று கிளம்பி சென்றுள்ளார்.
இவரது குடும்பம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிந்தி நகரில் வசித்து வந்துள்ளனா். பிரிவினைக்கு முன்பு கலாச்சாரத் தன்மையுடன் சமூகப் பிந்தியில் இருந்தது என நினைவு கூறுகிறார் ரீனா. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது 1947 ஆம் வருடம் ரீனாவின் குடும்பம் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்துள்ளது. அப்போது ரீனாவின் வயது(15 ). ரீனா இதைப் பற்றி சொல்லும் போது, எனது மனதில் இருந்து எனது பூர்வீக வீடு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் தெருவாசிகளை மறக்க முடியாது எனக் கூறியுள்ளார். எனது சகோதரிகளுக்கு நண்பர்கள் இருந்தனர். அவர்களில் முஸ்லிம்கள் உட்பட பல சமூகத்தினரும் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளனா். எனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் கூட பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.
கடந்த 1965 ஆம் வருடம் பாகிஸ்தானுக்கு செல்ல ரீனா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே போரால் பதட்டம் நிறைந்த சூழல் இருந்ததால். ரீனாவுக்கு விசா கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் சென்று திரும்பி வருவதற்கு ஏற்ற வகையில் இரு நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்த வேண்டும் என ரீனா வலியுறுத்தியுள்ளார்.