டாக்டர் செய்த செயலால்.. ஐந்து வருடங்களாக வெளியில் சொல்ல முடியாமல் தவித்த சிறுமி…!

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் டொல்டா கிராமத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு வெனிராம் மீனா (30) என்ற மருத்துவர் வேலையில் சேர்ந்தார். அப்போது, அங்கு சிகிச்சைக்கு வந்த பதிமூன்று வயது சிறுமிக்கு வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு ஐந்து வருடங்களாக தொடர்ந்து ‌அந்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.

இது பற்றி அறிந்த சிறுமியின் தந்தை மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் வெனிராமை காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பண்டி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இதில், சிறுமிக்கு டாக்டர் வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால். குற்றவாளியான மருத்துவருக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து குற்றவாளி வெனிராம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Baskar

Next Post

கள்ளக்குறிச்சி வன்முறை, வாட்ஸ் அப் காரணமா? உளவுத்துறை ரிப்போர்ட்..!

Sun Jul 17 , 2022
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17). ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் சின்னசேலம் லில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். , இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் […]

You May Like