fbpx

தேர்தலில் முன் விரோதம்; தனியாக சிக்கியவரை… அரிவாளால் வெட்டி பழி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்..!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகில் இருக்கும் ராசாம்பாளையம் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வருபவர் தாணு (34). இவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், இந்த ஊராட்சியின் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார்.

தாணுவை எதிர்த்து போட்டியிட்ட அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இளங்கோவனுக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (22) என்பவர் தேர்தல் வேலைகளை செய்துள்ளார். இவருக்கும், தாணுவுக்கும் இடையே தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட பிரச்சினையால், முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ராசாம்பாளையம் பெட்ரோல் பங்க் பக்கத்தில் பாலசுப்பிரமணியம் நின்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில்,அங்கு வந்த வழக்கறிஞர் தாணுவும், அவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த கண்ணன் (45) என்பவரும் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இது குறித்து பாலசுப்பிரமணியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார், வழக்குப்பதிவு செய்து தாணுவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான கண்ணனை தேடி வருகின்றனர்.  

Rupa

Next Post

டேவிட் வார்னரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து; இன்ஸ்டாகிராம் பதிவு.. நெகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள்..!

Wed Aug 31 , 2022
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ரசிகர்கள் இடையே எப்போதும் தனி இடம் உண்டு. இன்ஸ்டாகிராமில் டேவிட் வார்னரை லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெடில் ஐதராபாத், டெல்லி அணிகளுக்காக […]

You May Like