வாட்ஸ் அப்பில் வந்த போலி மெசேஜை பார்த்து ஏமாந்து, வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழந்த பரிதாபம் …!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (83). இவர் ஒரு ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு மெஸேஜ் வந்தது. உடனடியாக பணத்தை செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் என அந்த மெஸேஜில் கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து, நடராஜன் அந்த லிங்கை அழுத்தியுள்ளார். பின்னர் அந்த லிங்கிற்கு 10 ரூபாய் முன்பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு நடராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அவர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம்மிற்கு சென்று அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது அவரது அக்கவுண்ட்டில் இருந்து ரூ. 8 லட்சத்து 7 ஆயிரத்து 600 பணம் எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் இது பற்றி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலியான லிங்கை அனுப்பி நடராஜனின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 8 லட்சத்து 7 ஆயிரத்து 600 பணத்தை எடுத்து மோசடி செய்த மர்மநபரை தேடி வருகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் மோசடி சம்பவங்கள் கோவையில் தொடர்ந்து நடந்து வருவதால் சைபர் கிரைம் போலீசார் மோசடி தொடர்பாக விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல் துறையை வலியுறுத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

100 நாள் வேலைதிட்டம் குறித்த அடிப்படை புரிதல் கூட மோடிக்கு இல்லை: வயநாட்டில் வெளுத்து வாங்கிய ராகுல்..!

Sat Jul 2 , 2022
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு போதிய தெளிவு இல்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தார். கடந்த 24 ஆம் தேதி வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை சிலர் அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் தன்னுடை தொகுதியை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரள மாநிலம் வந்துள்ளார். […]

You May Like