பொதுவாக விடுமுறை என்றாலே மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி ஊர் சுற்ற கிளம்பி விடுவார்கள். அதிலும் கோடை விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். அந்த வகையில், தற்போது தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.
அந்த வகையில் பெரும்பாலும் நெடுந்தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்வது வழக்கமாக இருக்கிறது. அதேபோல ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதோடு ஒவ்வொரு முக்கியமான பண்டிகை காலங்களிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் கோடை விடுமுறையில் பொதுமக்களின் வசதிக்காக 217 சிறப்பு ரயில்கள் உட்பட 4010 ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றது. அதில் இருக்கைகளை முடக்கி வைத்தல், இடைத்தரகர் போன்ற முறைகேடுகளை கண்காணிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்கும் பல்வேறு நுணுக்கங்கள் கையாளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது