fbpx

பீட்சா பிரியரா நீங்கள்.. பீட்சா மாவுக்கு அருகில் கழிவறை பிரஸ் மாப் வேகமாக பரவும் புகைப்படம்..!

பெங்களூரில் உள்ள பீட்சா உணவகத்தில், பீட்சா மாவு வைக்கப்பட்டிருந்த டிரே அருகில் கழிவறை சுத்தம் செய்யும் பிரஷ் மற்றும் மாப் தொங்க விடப்பட்டிருப்பதாக புகைப்படத்துடன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பானிபூரி தாயாரிப்பது குறித்து இணையத்தில் ஒரு வீடியோ பரவியது. அதில் பானிபூரி செய்யப் பயன்படும் மாவுமீது ஒரு இளைஞர் ஏறிநின்று மிதிக்கும் காட்சி இருந்தது. இது பானிபூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெங்களூரில் இருக்கும் ஒரு டோமினோஸ் பீட்சா கடையில் பீட்ஸா தயாரிக்கப்படும் மாவு டிரே சுகாதாரமில்லாமல் இருக்கும் புகைப்படத்தை நெட்டிஸன் ஒருவர் பகிர்ந்திருந்தார். மேலும் அந்த மாவு டிரே மீது, தரையைத் துடைக்கும் பிரஷ், கழிவறையை சுத்தம் செய்யும் பிரஷ், போன்றவை இருந்தது. இந்தப் புகைப்படங்களை ஷாகில் கர்நானி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸாக்கள் புத்தம் புது பீட்ஸாகளா தயாரிக்கப்படுகிறாதா எனக் கேட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த புகைப்படங்களுக்கு டோமினோஸ் பீ்ட்சா நிறுவனம் பதில் கூறியுள்ளது. அதில் எங்கள் பீட்சாக்கள் தரமான சூழலில் தான் தயாரிக்கப்படுகிறது. எப்போதுமே உலகத் தரம்வாய்ந்தவை. எனவே இந்த சம்பவம் பற்றி அந்தக் கடைக்காரரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பீட்சாவின் தரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றில் எப்போதும் சமரசம் இல்லை எனக் கூறியுள்ளது.

Baskar

Next Post

அம்மா உணவகம் மூலம் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் ரத்தா? - அமைச்சர் பரபரப்பு விளக்கம்

Tue Aug 16 , 2022
மழை காலத்திற்குள்ளாக சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 70 முதல் 80 சதவீதம் நிறைவு பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாநகராட்சி நிதியில் இருந்து ஊக்கத் தொகையானது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 12 கல்வி ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகைக்கு, இந்த ஆண்டு மட்டும் தகுதியுடைய 425 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி […]
’முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க அமைச்சர்களுக்குள் போட்டி’..! - அமைச்சர் கே.என்.நேரு

You May Like