தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அதிலும் படித்த பட்டதாரி இளைஞர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்ற செவ்வாய்க்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரையில் எல்லோரும் பங்கேற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சாலையில் இருக்கின்ற பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வேலை வாய்ப்பு என்பது கல்வி தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். இந்த முகாமின் மூலமாக தனியார் துறையில் பணி நியமனம் பெறுபவர்களின் அரசு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எந்த காரணத்தை முன்னிட்டும் ரத்து செய்யப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.