அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள கிராமத்தில் விஜய் பிரகாஷ் மற்றும் காதல் மனைவி அபிராமி மற்றும் இருவரும் தங்களது ஒன்றரை வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் அபிராமி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.
5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டில் சமைக்க மீன் கழுவிய போது தண்ணீரில் மகன் விளையாடியுள்ளான் அதற்காக அவனை அடித்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன் அபிராமியை அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அபிராமி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு உடம்பில் தீ வைத்துக் கொண்டுள்ளார். 95 சதவீதம் தீக்காயத்துடன் அபிராமி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார். அபிராமி அம்மாவிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அபிராமியின் அம்மா போலீசாரிடம் அபிராமியின் வாக்கு மூலத்தை கூறினார்.
வாக்குமூலத்தில் மாமனார் கலியமூர்த்தி அபிராமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் எரிந்ததை பார்த்த கணவன் சாக்கை எடுத்து அபிராமி மீது போட்டு தீயை அணைத்துள்ளார் என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் கணவர்,மாமியார் மற்றும் மாமனார் மற்றும் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.