fbpx

பேய் பிடித்தது போல்.. கூச்சலிட்டு, அலறி விழுந்து புரண்ட மாணவிகள்.. அச்சத்தில், பாதிரியாரை வரவழைத்த ஆசிரியர்கள்..!!

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று எப்பொழுதும் போல் பள்ளிக்கு வந்த மாணவிகள், திடீரென சத்தம் போட்டு அழுதும். கூச்சலிட்டு தரையில் உருண்டு புரண்டும் வினோதமாக நடந்து கொண்டனர்.

இதை கண்ட பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் உடனே மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் அளித்து பள்ளிக்கு வரவழைத்தனர். அது மட்டுமல்லாமல் அருகில் உள்ள பாதிரியாரை அழைத்து வந்து மாணவிகளை சாந்தப்படுத்த முயற்சி செய்தனர். இதனால் எந்த பயனும் அளிக்கவில்லை. மாணவிகள் தொடர்ந்து கத்தி அழுதும், பள்ளி வளாகத்தில் அங்கும் இங்கும் உருண்டனர். எனவே பள்ளியில் மருத்துவக்குழுவினரை வரவழைத்து சோதனை செய்தனர்.

பாகேஷ்வர் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தங்களுடன் படித்த தோழி ஒருவர் மூழ்கிய சம்பவத்தில் இருந்து மாணவிகள் வெளியே வராமல் அதிர்ச்சியில் இருப்பதாகவும், இதனாலே இந்த மாதிரி செயல்களை செய்வதாகவும், மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரகாண்டில் பள்ளி மாணவிகள் கூச்சலிட்டு கதறி அழுத வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

கள்ளக்குறிச்சி விவகாரம்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல்..!

Fri Jul 29 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டுமென […]
கனியாமூர் கலவரத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு எவ்வளவு..? வெளியானது முழு விவரம்..!

You May Like