fbpx

மின்விசிறி கழன்று பெண்ணின் தலையில் விழுந்ததால்… திருத்தணி முருகன் கோவிலில் பரபரப்பு..

திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடாக திகழ்வது இத்திருத்தலமாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணமிருப்பர். மேலும் மலைமேல் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம், காதுக்குத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்.

இந்நிலையில் சென்னை ஆவடி அருகே உள்ள கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி லட்சுமி (40). இவர்கள் தங்கள் உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்காக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உள்ள ஆர்.சி.சி.மண்டபத்தில் காது குத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென மண்டபத்தில் இயங்கிக் கொண்டிருந்த மின்விசிறி கழன்று லட்சுமியின் தலைமீது விழுந்தது.

இதில் காயமடைந்த லட்சுமி மயக்கமடைந்தார். உறவினர்கள் லட்சுமியை, மலைக்கோவில் வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி லட்சுமியின் உறவினர்கள் கோவில் நிர்வாகத்தினரை கடுமையாக விமர்சித்தனர், மேலும் கோவிலில் இருக்கும் மின்சாதன பொருட்களை முறையாக பராமரிப்பதில்லை, கோவில் நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தால் திருத்தணி முருகன் கோவில் பரபரப்பாக காணப்பட்டது.

Rupa

Next Post

அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் - 6..? மீண்டும் வருகிறார் கமல்..! போட்டியாளர்கள் இவர்கள்தான்..!

Thu Aug 4 , 2022
பிக்பாஸ் சீசன் – 6 எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்த ஒரு உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டுடன் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6வது சீசனுக்கான பணிகள் நடந்து வருகிறது. முதல் 5 சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கிய நிலையில், ஓடிடியில் தொடங்கப்பட்ட ’பிக் பாஸ் […]

You May Like