ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியில் குடியிருப்பவர் பஷீர் அகமது. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அகமதுவின் மகள் ஷபீனா (16). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி காலாண்டு தேர்வில் ஷபீனா மிகவும் குறைந்த மதிப்பெண்களை எடுத்துள்ளார்.அதனால் அவரது பெற்றோர், ஷபீனாவை கண்டித்து ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறி இருக்கின்றனர்.
இந்நிலையில் தனக்கு சரிவர படிப்பு வரவில்லை என ஷபீனா மன வருத்தத்தில் இருந்துள்ளார். எனவே அவர் வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை தொடர்ந்து ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுப்பதை பார்த்து விட்டு அவரது பெற்றோர் கேட்ட போது தான், எலி பேஸ்ட் சாப்பிட்டதை ஷபீனா கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஷபீனாவை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷபீனா பரிதாபமாக உயிரிந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை பஷீர் அகமது அளித்த புகாரின் அடிப்படையில் சூரம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.