சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பட்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் ராமதாஸ்(34). ராமதாசுக்கு தர்மபுரி மாவட்டம் செங்கொடி புரத்தில் வசிக்கும் 24 வயதான இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் வெகு நாட்களாக நட்புடன் பழகி வந்ததாகவும், கூறப்படுகிறது.
இதனிடையே அந்த இளம் பெண்ணிடம் ராமதாஸ் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள ராமதாஸிடம் வற்புறுத்தி உள்ளார். அதற்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த பெண் தர்மபுரி மாவட்ட காவல்துறையினரிடம் ராமதாஸ் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து, அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து தர்மபுரி காவல்துறையினர் ராமதாசை விசாரணை நடத்தி வருகின்றனர்