விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கடந்த வாரம் இனியா தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இனியா மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்சமயம் குணமடைந்து இருக்கிறார்.
தன்னுடைய மகள் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்த பாக்யா, தன்னுடைய குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றார்.
அதோடு கோபி மற்றும் ராதிகாவால் தான் இனியா இவ்வாறு ஒரு முடிவை மேற்கொண்டு இருக்கிறார் என்பதால் தன்னுடைய மகளை பாக்யா தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார் ஆனால் கோபி தன்னுடைய மகள் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.
சிகிச்சைக்கு பின் உயிர்ப்பிழைத்த இனியா தற்போது தன்னுடைய தாய் பாக்யாவுடன் செல்ல சம்மதம் தெரிவிப்பாரா? அல்லது மீண்டும் தன்னுடைய தந்தை கோபியுடன் செல்ல முடிவு செய்வாரா? என்பதை எதிர்வரும் நாட்களில் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.