fbpx

எழுத்தாளருக்கு ஜாமின் வழங்கிய வழக்கு; பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பெண் ஆடை அணிந்ததால் ஜாமீன்..!

கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவிக் சந்திரன். 74 வயதான சிவிக் சந்திரன் ஒரு மாற்றுத்திறனாளி. இதனிடையே, சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில் வைத்து கடந்த 2020- வருடம் பிப்ரவரியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளம்பெண் எழுத்தாளர் காவல் துறையில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கேட்டு சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் செய்த பெண் தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக் சந்திரன் இணைத்து கொடுத்துள்ளார். இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. முன் ஜாமின் வழங்கியதற்கான உத்தரவு நகல் இன்று வெளியானது. அதில், முன் ஜாமின் கேட்டு மனுதாரர் தாக்கல் செய்த மனு மற்றும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தனது உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார்.

அந்த ஆடை பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் உள்ளது. உடல் ரீதியிலான தொடர்பு இருந்தது ஒப்புக்கொண்ட போதும், 74 வயதான மாற்றுதிறனாளி நபர் ஒருவர், புகார் அளித்த பெண்ணை தனது மடியில் வலுக்கட்டாயமாக அமரவைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறுவதை நம்பமுடியவில்லை. எனவே, சட்டப்பிரிவு 354 ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது என கருதப்படுகிறது. இதனால், மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கப்படுகிறது, என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பிற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Rupa

Next Post

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதை மாற்ற முடியாது..!! ரவீந்திரநாத்..

Wed Aug 17 , 2022
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23-ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், மேலும் தனி கூட்டம் கூட்டக் கூடாது. […]

You May Like