fbpx

Big Breaking நாடு முழுவதும் உச்சமடைந்த கொரோனா தொற்று பாதிப்பு….! மத்திய மாநில அரசுகள் எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கைகள்…..!

நாடு முழுவதும் சமீப காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழகத்தில் இந்த நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பால் ஆங்காங்கே உயிர் பலியும் நிகழ்கிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மாநில அரசு மத்திய அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் தான் நாட்டில் நோய் தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது என்று கூறப்படுகிறது. நேற்று 7,830 ஆக இருந்த நோய் தொற்று பாதிப்பு இன்று 10,158 ஆக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலமாக நோய் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 44,498 என்று அதிகரித்துள்ளது.

இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, இரவு நேர ஊரடங்கு, மற்றும் work from home என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மிக விரைவில் ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

நாளை பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டு….! பொது விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு….!

Thu Apr 13 , 2023
பொதுவாக சித்திரை மாதம் முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடிய வருகிறார்கள் உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டின் போது கொண்டாட்டங்கள் ஆரவாரமாக இருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டு தமிழர்களுக்கு மட்டுமே சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பொங்கல் தினத்தன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார், ஆனால் அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்காததால் அவர் அதனை […]

You May Like