fbpx

குழந்தை பெற்ற கையோடு 10 ம் வகுப்பு தேர்வு எழுதிய 22 வயது இளம் பெண்….!

பீகார் மாநிலம் வாங்கா மாவட்டத்தை சார்ந்தவர் ருக்மிணி குமாரி (22) இவர் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை கணித தேர்வை எழுத காத்திருந்தார். மறுநாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டியதாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் இரவில் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. ஆனாலும் மறுநாள் தேர்வு எழுத வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். இது தொடர்பாக தன்னுடைய எண்ணத்தை அவர் குடும்பத்துடன் தெரிவித்து இருந்தார்.ஆகவே மறுநாள் காலை 3 மணி நேரத்திற்கு முன்பாகவே அவர் தேர்வு அறைக்கு சென்றார் ஆனால் சற்று நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

வலியை தாங்க முடியாத அவரை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன. அங்கு அவருக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. உடனே ருக்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.

சுகப்பிரசவமாக இருந்ததால் அவருடைய உடல் நிலையும் நன்றாக காணப்பட்டது. ஆகவே அந்த பெண்ணை மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அனுமதித்தனர். இக்கட்டான சமயத்திலும், கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தேர்வு எழுதிய ருக்மணி ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாராட்டி இருக்கிறார்கள்.

Next Post

ஓடிடி-க்கு வருகிறது வாரிசு திரைப்படம்……! எப்போது தெரியுமா…..?

Fri Feb 17 , 2023
விஜய் நடிப்பில் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் தான் வாரிசு. தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்திற்கு இடையிலும் வசூலில் தூள் கிளப்பியது.வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறார். திரையரங்கில் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு வரும் இந்த வாரிசு திரைப்படம், எப்போது ஓடிடிக்கு வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டு […]

You May Like