fbpx

ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கு…..! பாஜகவின் மாநில நிர்வாகி அதிரடி கைது…..!

தமிழ்நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேரிடமும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி கொடுப்பதாக தெரிவித்து 2,438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் இயக்குனராக இருந்த ஹரிஷ் எந்தவித வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இத்தகைய நிலையில், பாஜகவில் இணைந்த அவருக்கு விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உண்டானது இந்த வழக்கு விசாரணையின் போது பாஜக நிர்வாகி ஹரிஷ் சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கி இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் தற்சமயம் பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல்ராஜ் என 3 பேர் வெளிநாட்டில் தலைமுறைவாக இருக்கிறார்கள். பொருளாதார குற்றப்பிரிவில் ஹரிஷ் மீது மோசடி வழக்கு இருக்கின்ற நிலையில், பாஜகவில் சில மதங்களுக்கு முன்னர் அவருக்கு மாநில விளையாட்டு பிரிவு செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

கன்னியாகுமரி பாதிரியார் வழக்கில் விசாரணை முறையாக நடைபெறுகிறது தவறான தகவலை பரப்ப வேண்டாம்…..! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்…!

Fri Mar 24 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெணடிக்ட் ஆண்ட்ரோ(29) என்பவர் அழகிய மண்டபம் அருகே பினாங்காலையில் இருக்கின்ற கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார் இவர் 75க்கும் அதிகமான பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையில் பெண்கள் புகார் வழங்கியதன் அடிப்படையில், பாதிரியார் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே […]

You May Like