தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், வங்க கடல் பகுதியில் வருகின்ற 7ம் தேதி அதாவது நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் அது புயலாக உருமாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.