fbpx

தங்கையை தொல்லை செய்த மாணவனை கண்டித்ததற்கு அண்ணனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை……!

கிருஷ்ணகிரி சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன திருப்பதி கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு கணித அறிவியல் படித்து வருகின்றார். அதே கல்லூரியில் படிக்கும் இவருடைய தங்கைக்கு செட்டியம்பட்டியில் இருக்கின்ற ஒரு கல்லூரியை சேர்ந்த 3ம் ஆண்டு பிஏ ஆங்கிலம் படிக்கும் மாணவன் லிங்கேஸ்வரன் காதல் தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று பெண்ணின் சகோதரர் சின்ன திருப்பதி லிங்கேஸ்வரனை கண்டித்து இருக்கிறார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் லிங்கேஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்ன திருப்பதி கருத்தை அறுத்து இருக்கிறார்.

கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த சின்ன திருப்பதி கீழே விழுந்த நிலையில், அவரை மீட்ட அருகில் இருந்த நபர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது……! தென்காசியில் பரபரப்பு……!

Fri Feb 24 , 2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார் பட்டியை சேர்ந்தவர் ராஜதுரைலிங்கம்(43) அதை தொகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்த சூழ்நிலையில் ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் பாலியல் ரீதியாக கேலி கிண்டல் உள்ளிட்டவையை செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக, மனமுடைந்த அந்த பள்ளி மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், பள்ளிக்கு செல்லாமல் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like