fbpx

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவை; மத்திய அரசு அறிவிப்பு..

நாடு முழுவதும் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வழங்கப்படவுள்ளது. புதுச்சேரியில் ஒரு கிராமத்தில் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 534 கிராமங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டம் மற்றும் நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களுக்கு ரூ.26,316 கோடி மதிப்பில் அவற்றை முழுமையாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமைச்சரவையில், அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.

இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கரூர்,மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம் சிவகங்கை, தென்காசி, உட்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் ஒரு கிராமத்திலும் பி.எஸ்.என்.எல். 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rupa

Next Post

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு... விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்..

Fri Jul 29 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் மரணித்தார். மாணவியின் மரணம் குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்ந வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.மேலும் இந்த வழக்கில் பள்ளியின் கரஸ்பாண்டன்ட் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது […]

You May Like