அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றார். இவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த விதத்தில் சென்ற 2ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வடசேரியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கருப்பு கொம்பன் காளை பங்கேற்றது.
இந்த நிலையில், இந்த காலை மாட்டை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விட்ட சமயத்தில் திடீரென்று ஒரு கம்பியில் மோதி மயங்கி கீழே விழுந்தது. இதன் காரணமாக, அந்த மாடு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதன் பின்னர் உயிரிழந்த மாட்டின் சடலம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன் பிறகு விஜயபாஸ்கருக்கு சொந்தமான தோட்டத்தில் அந்த மாடு புதைக்கப்பட்டது. இந்நிலையில், தன்னுடைய காலையில் இறுதி நினைவுகள் குறித்த வீடியோ ஒன்றை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.