fbpx

காரைக்காலில் நகை மோசடியில் தேடப்பட்ட பெண் தொழிலதிபர்…..! விஜயவாடாவில் அதிரடி கைது……!

காரைக்கால் பெரமசாமி பிள்ளை வீதியில் கைலாஷ் என்ற நபர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் சென்ற 11ஆம் தேதி தேதி நகைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜெஸ்மாண்ட் உள்ளிட்ட 5️ பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு காரைக்கால் பகுதியில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்ட வழக்கிலும் தொடர்பு இருக்கிறது. என்ற விவரம் இந்த விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஜெரோம் ஜெஸ்மாண்டின் நண்பரும், காரைக்கால் அம்மாள் சத்திரம் தொகுதியைச் சேர்ந்த தொழிலதிபருமான புவனேஸ்வரி (40) என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

காவல்துறையினர் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட அவர், விஜயவாடா அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் தலைமுறைவாக தங்கி இருந்தார். இதனை அறிந்து கொண்ட தமிழக காவல்துறையினர் அவரை நேற்று கைது செய்து காரைக்காலுக்கு அழைத்து வந்தனர். இந்த கும்பல் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவற்றில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Next Post

காய்ச்சல் காரணமாக தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறையா..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில் இதோ..

Thu Mar 16 , 2023
காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.. சமீபகாலமாக நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது..எனினும் மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என்றும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் […]
கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!

You May Like