தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்களை கடந்து 3வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது இந்த நிலையில் அமைச்சர் அதை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 23ஆம் தேதி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அது தொடர்பான ஒரு சிவப்பு பட்டியலை தயாரித்து அதில் சில அமைச்சர்களின் பெயர்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதவி பிடுங்கப்பட்டது.அதோடு மட்டுமல்லாமல், அமைச்சரவையில் உள்ள பலரின் இலாகாக்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் கனிம வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றும் மனோ தங்கராஜுக்கு பால்வளதுறையும், துரைமுருகனுக்கு சட்டத்துறையும், ரகுபதிக்கு நீர்வளத்துறையும் மாற்றி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் புதிதாக அமைச்சரவை உள்ள டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.