இங்கிலாந்தை சேர்ந்தவர் டேனிலி வாட்ஸ் (42). இவருக்கு நீண்ட காலமாக பல் ஈறுகளில் வலி இருந்துள்ளது. உள்ளூரில் இருந்த பல் மருத்துவமனையும் ஏழு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. இதனால் அவரால் உடனடியாக சிகிச்சை பெற முடியவில்லை. மேலும் வெளியூர் சென்று சிகிச்சை பெறவும் அவருக்கு வசதியில்லை. இதனால் என்ன செய்வது தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் வாட்ஸ். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பல் ஈறுகளில் மிகவும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிட்டும் வாட்ஸுக்கு வலி குறையவில்லை. இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்றால் பற்களை பிடுங்கிவிடுவார்கள் என நினைத்த வாட்ஸ், பற்களை அவரே பிடுங்கி விட முடிவு செய்தார். அதை செய்தால் வலியிலிருந்து தப்பிக்கலாம் என நினைத்தார். இதையடுத்து தனது பற்களை தானே பிடிங்கியுள்ளார். ஒரு பல் இல்லை மொத்தம் 13 பற்களை அகற்றியுள்ளனர். அதில் முன் பகுதியில் இருக்கும் பற்களும் அடங்கும். இதுகுறித்து வாட்ஸ் கூறுகையில், நான் இப்படித்தான் தினந்தோறும் வாழ்ந்து வருகிறேன். வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்வேன், என் குழந்தைகளை கவனித்துக் கொள்வேன். வேலைக்கு செல்கிறேன். இவற்றையெல்லாம் என் கஷ்டங்களைமறைத்துக் கொண்டு செய்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் வந்தார்கள் வந்தால் கூட அவர்களிடம் பேசுவதில்லை சொல்ல போனால் அவர்களிடம் பேசுவதை வெறுக்கிறேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியின் அரசியல்வாதி கேடி பார்க்கர் என்பவர் வாட்ஸின் வசதியின்மை பற்றிய உண்மையை அறிந்து வாட்ஸின் சிகிச்சைக்காக நிதி திரட்டினார். இதன் மூலம் 1200 அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளன. இதை வைத்து வாட்ஸுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வெறும் 14 பற்களை மட்டுமே கொண்டுள்ள வாட்ஸுக்கு மேலும் எட்டு பற்கள் அகற்றப்பட உள்ளது. மேலும் அவருக்கு எடுக்கப்பட்ட பற்களுக்கு பதிலாக செயற்கை பற்கள் பொருத்தப்பட உள்ளது. தனது மருத்துவ செலவுக்காக பலர் நன்கொடை அளித்துள்ளது பற்றி வாட்ஸ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் எனக்கு பலர் நன்கொடை அளித்துள்ளனர். அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது. இருப்பினும் என்னுடைய உடல் நலனில் அக்கறையுடன் எனக்காக உதவியுள்ளனர். இதனால் நான் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார். மேலும் இவருக்கு ஆகஸ்ட் மாதத்தில் செயற்கை பற்கள் பொருத்தப்படவுள்ளன.