fbpx

BreakingNews: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு….! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு……!

அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சமரசமாக செல்வதாக தெரிவித்ததால் அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்க்கும் விதமாக, ஊழல் தடுப்பு அமைப்பு சார்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததோடு வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும் அதன் பின்னரும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யாத குற்ற பிரிவு காவல் துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து ஊழல் தடுப்பு அமைப்பு முறையீடு செய்தது.

அதே சமயத்தில், அமலாக்கத்துறை சார்பாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தவும், செந்தில் பாலாஜிக்கு சமன் அனுப்பிய உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் விதமாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணமுராரி ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு ,செந்தில் பாலாஜி மீதான புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், தேவைப்பட்டால் சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதோடு, அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குற்றப்பிரிவு காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறிய மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Next Post

நீங்கள் என்றுமே இளமையாக இருக்க விரும்புகிறீர்களா..? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Tue May 16 , 2023
என்றுமே இளமையாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? நம் அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டும், இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆசை இருந்தால் மட்டும் போதுமா? அதனை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சில முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை நாம் பட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. பிறரின் அனுபவங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், இளமையாக இருப்பவர்கள் அவர்களின் இளமையை […]

You May Like