கடந்த 8ம் தேதி தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது .இதில் 94.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், இன்று சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளை https://results.cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ வாரியத்தின் cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலமாகவும் சிரமமின்றி மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். கூடுதலாக பள்ளி மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியின் மூலமாக முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.