கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் சித்தராமைய்யா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே சி வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக பேசியதாவது கட்சியின் சார்பாக துணை முதலமைச்சராக சிவகுமார் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி பிரச்சனை நடந்த ஒரு வார காலமாக புகைந்து கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக முதலமைச்சர் பதவி பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார்? யார்? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது இதில் 10 புது முகங்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க காங்கிரஸ் கட்சியின்மையிடம் முடிவு செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ஆகவே அமைச்சர் பதவியை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர் அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சந்தோஷ் லாட் சரண், பிரகாஷ் பாட்டில், ஹரிபிரசாத், எம் பி பாட்டில் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தெரிகிறது