fbpx

விடாது துரத்தும் மழை தமிழகத்தில் அடுத்த 5️ நாட்களுக்கு மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்!

தமிழக பகுதிகளில் நிலவி வரும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால், இன்றைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல நாளையும், நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பொதுவாக வறண்ட வானிலையே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் எட்டாம் தேதி வரையில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அள்ள சொன்ன திமுக எம்எல்ஏ..? வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

Wed Jan 4 , 2023
தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் மீது அவ்வபோது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏவும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதன்படி, சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கார்ப்பரேஷன் ஊழியர் வெறும் கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளி சுத்தம் செய்ததாக குறிப்பிடப்பட்ட அந்த […]
சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அள்ள சொன்ன திமுக எம்எல்ஏ..? வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

You May Like