தமிழகத்தில் கோடை வெப்பம் பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகின்ற நிலையில், பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு மாற்று வழிமுறைகளை தேடி வெப்பத்தை பொதுமக்கள் சமாளித்து வருகிறார்கள்.
அதோடு தலைநகர் சென்னையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவில் லேசான தூறல் மழை பெய்தது சென்னையில் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது ஆகவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் கோவை வால்பாறையில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.