fbpx

பட்டு வேஷ்டி சட்டையுடன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்….!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நேற்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில், பல அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பிரதமர் என்று தமிழக மக்களுக்கு தனி, தனியே வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கட்டு வேஷ்டி சட்டை அணிந்து வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் .

உழவே தலை என வாழ்ந்த உழைப்பு சமூகத்தை சேர்ந்தவர்கள் நாம் அன்னையை குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள்.

மனிதன் மட்டுமல்ல மற்ற உயிர்களையும் தன்னுடன் இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு மற்ற உயிரினங்கள் இவை அனைத்துக்கும் சேர்த்து கொண்டாடும் ஒற்றை விழா தான் பொங்கல் திருவிழா கற்பனை கதைகள் இல்லாத பண்பாட்டு பெருவிழா வானம் கொடுத்தது பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது வாழ்வாக்கி கரம் குவித்து உதய சூரியனை வணங்குவதன் மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து, புது பானையில் புத்தரிசி போட்டு புத்தொளி ஊட்டி, அடுப்பு மூட்டி பானை மேலே வழிந்தோடும் அன்பு முறையை போல நாடு முழுவதும் அனைவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அதனால் தான் இந்த தை மாதத்தை தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகின்றோம்.

பொங்கல் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம், இலக்கிய திருவிழா, கலை திருவிழா நம்ம ஊரு திருவிழா, ஏறு தழுவுதல் என தமிழர் மாதமாகவே இந்த தை மாதம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சாதி மத பாகுபாடுகள் எதுவும் இல்லாமல் தமிழர்கள் எல்லோரும், தமிழக மக்கள் எல்லோரும் கொண்டாடும் சமத்துவ பொது விழாவாகவே இந்த பொங்கல் விழா இருக்கிறது. தாய்த்தமிழ் நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும் செங்கரும்பைப் போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும் என்று தெரிவித்து, எல்லோருக்கும் என்னுடைய தைத்திருநாள், தமிழர் பெருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Next Post

பாஜகவிற்கு எதிராக நடை பயணத்தை தொடங்கும் காயத்ரி ரகுராம்…! அதிர்ச்சியில் மாநில தலைமை….!

Sun Jan 15 , 2023
தமிழகத்தில் பாஜக சமீப காலமாகத்தான் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு அந்த கட்சியை சார்ந்தவர்களே முட்டுக்கட்டையாக இருப்பது தான் பாஜகவின் மாநில தலைமைக்கு மிகப்பெரிய வருத்தமான செய்தியாக இருக்கிறது. அந்த கட்சியை சார்ந்த கே டி ராகவன் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் தான் அந்த கட்சியைச் […]
’பெண்களை அவமானப்படுத்திய பாஜக’..!! சென்னை To கன்னியாகுமரி வரை..!! காயத்ரி ரகுராம் நடைபயணம் அறிவிப்பு..!!

You May Like