உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த பத்தாம் தேதி அன்று கவுந்தியாரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறுமியை, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு அந்த சிறுமியை கடத்தி உள்ளார். அந்த சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து மூன்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுமியை உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளனர். அந்தரங்க பகுதியை சிதைத்திருக்கின்றனர்.
மேலும் சிறுமியை சாலையில் தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். இதனால் சிறுமி தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அந்த பகுதியில் உள்ளவர்கள் அளித்த தகவல் அறிந்து, பெற்றோர் ஓடி வந்து மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்படி ஒரு கொடுமை நடந்திருந்தும் சிறிய சாலை விபத்து என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமிக்கு மனநலம் பாதிப்பு என்று வழக்கில் பதிவு செய்துள்ளனர் . இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோர் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன் பின்னர், ஆரம்பத்தில் கிடைத்த தகவல் அப்படித்தான் இருந்தது எனக்கூறி, தற்போது இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது என்றனர். எனவே தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தீவிரங்காட்டி வருகின்றனர்.