கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த தென்காசியை சேர்ந்த மோனிஷா(18) என்பவர் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருக்கிறார்.
ஆனால் தற்போது நர்சிங் படித்துக் கொண்டு நீட் தேர்வில் எழுத அவர் தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்தார். வரும் 7ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தார். அவருக்கு நெல்லை மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்ற 2 முறை இந்த தேர்வில் தோல்வியடைந்ததை முன்னிட்டு இந்த முறை எப்படியாவது தனக்கு நல்ல மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் மருத்துவராகும் ஆசை நிறைவேறுமா? என்று அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் அவர் திடீரென்று நள்ளிரவு சமயத்தில் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த சக மாணவிகள் மனிஷாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.