அண்மை காலமாக இளைஞர்களுக்கு பிடித்த ஒரு இயக்குனராக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே பிரபல நடிகர் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த நிலையில், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படத்தில் இவர் தன்னை ஒரு கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.
அத்துடன் இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், யோகிபாபு, ரவீனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், இந்த திரைப்படத்தை தெலுங்கிலும் வெளியிட்டனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது வரையில் 70 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
இந்த நிலையில் தான் லவ் டுடே திரைப்படத்திற்காக நடிகை ராதிகா சரத்குமார் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் கதாநாயகனான பிரதிப் ரங்கநாதனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்று தகவல் கிடைத்திருந்த நிலையில், தற்போது ராதிகாவுக்கு வழங்கிய சம்பளத்தின் விவரமும் தெரிய வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.